டேக்ஸினா (Taxina) – நிறுவனர் அறிக்கை

டேக்ஸினா (Taxina) – நிறுவனர் அறிக்கை

நமது குழுவில் பயணிக்கும் அனைத்து ஓட்டுநர் நண்பர்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், நான் பரத் குமார் D.T.Ed, M.A, B.Ed, ஸ்ரீ ராஜகணபதி ட்ராவல்ஸின் நிறுவனர். குழுவில் இருக்கின்ற சில அதிக நண்பர்களுக்கு என்னை தெரிந்திருக்கும், என்னை தெரியாத நண்பர்களுக்கு என்னைப் பற்றிய ஓர் அறிமுகம். பதினாறு வருடங்களுக்கு முன்னாள், நான் ஒரு ஓட்டுனராக, ஒரே ஒரு ஆம்னி (omni) உடன் துவங்கப்பட்டது தான் நம் ஸ்ரீ ராஜகணபதி ட்ராவல்ஸ். இன்று பதினெட்டு வண்டிகள் சேலத்தில், பெயர் சொல்லக்கூடிய ஒரு முன்னணி ட்ராவல்ஸ் ஆக இத்தனை வருடங்கள் நிலைத்து இருக்க ஒரே காரணம் என்னுடனே பயணித்த என் சக ஓட்டுனர்கள் மற்றும் என் நண்பர்களே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
இந்த பதினாறு வருடத்தில் நம் தொழிலில் அதிக வளர்ச்சியையும் பார்த்திருக்கின்றேன், கொரோனா (CORONA) போன்ற சில வீழ்ச்சியையும் பார்த்திருக்கின்றேன். வண்டியின் முதலாலியிடமும், ஓட்டுநரிடமும் இருந்த நம்முடைய தொழில், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இன்று அது நம் கையை விட்டு போய்விட்டது. நம்முடைய தொழிலில் நாம் என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று நம்முடைய தொழிலுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் முடிவு செய்கிறார்கள். நாமும் அதை சகித்துக்கொண்டு தொழில் செய்துகொண்டு இருக்கின்றோம்.

இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? எதை வைத்து அவர்கள் நம்மை கட்டுப்படுத்துகிறார்கள்?.

தொழில்நுட்பம் (Technology), இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகவும் வேகமாக, அபிரிமிதமா  வளர்ந்து வரும் டெக்னாலஜிதான் இதற்கு காரணம். அந்த டெக்னாலஜி நம்மிடம் இருந்தால், நமக்கான டெக்னாலஜியை நாமே உருவாக்கினால், நம் பிரச்சனைகளை தொழில்நுட்ப உதவிக்கொண்டு ஏன் நாமே தீர்த்துக்கொள்ளக்கூடாது.

நம்முடைய தொழிலை, மீண்டும் நம்மிடமே கொண்டுவரும் முயற்சி தான் டேக்ஸினா (Taxina). நம்முடைய முயற்சியின் முதல் அடிதான் டேக்ஸினா மொபைல் ஆப் (Taxina Mobile App). கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக ஆராய்ச்சி செய்து, நம் ஓட்டுநர்களிடம் கலந்து ஆலோசித்து, அவர்களுடைய பிரிச்சனைகள் அனைத்தையும் தெளிவாக புரிந்து கொண்டு. ஒரு டாக்ஸி புக்கிங் ஆப் (taxi booking app) என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று பார்த்து பார்த்து உருவாக்கியது தான் டேக்ஸினா மொபைல் ஆப் (Taxina Mobile App).

நம்முடைய ஆப்இல் கமிஷன் கிடையாது. நம்முடைய ஆப்இல் எப்பொழுதும் வரையறுக்கப்பட்ட இணைப்பு (லிமிடெட் அட்டச்மெண்ட்) தான். உங்கள் வாகனத்திற்கான வாடகையை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். பயணிகளுக்கு சிறந்த சேவை தர வேண்டும் என்பதைத்தவிர Taxina-வில் வேற எந்த கட்டுப்பாடும் கிடையாது. Taxina நமக்காக நாமே  உருவாக்கிக்கொண்ட நமது app.

செயலி உருவாக்கம் (app development) அனைத்தும் முடிந்துவிட்டது. இப்பொழுது சோதனை ஓட்டம் நடந்துகொண்டு இருக்கின்றது. செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் நம்முடைய செயலியை பொதுமக்களுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றோம். செப்டம்பர் முதல் வாரத்தில் உங்கள் அனைவரையும் நேரில் அழைத்து ஒரு கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கின்றோம். நம்முடைய செயலி (app) எப்படி வேலை செய்கின்றது, எப்படி செயலியில் இணைவது, நம்முடைய ஓட்டுநர்கள் நண்பர்களுக்கு டேக்ஸினாவில் (Taxina)-வில் கிடைக்க இருக்கின்ற நன்மைகள் என்னென்ன என்று நீங்கள் அந்த கூட்டத்தில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய கூட்டம் (Meeting) பற்றிய மற்ற விவரங்கள் கூடிய விரைவில் இந்த குழுவில் தெரிவிக்கப்படும். டேக்ஸினாவில் (Taxina) நமக்கான பாதையை நாமே உருவாக்குவோம். தொழில் உங்களுடையது, தொழில்நுட்பம் எங்களுடையது.

நன்றி.

B. பரத் குமார் D.Ted, M.A, B.Ed
Co-founder
Taxina
Tags :
Blog
Share This :